25.3 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

விவாகரத்துக்குப் பின்னர் மனைவிக்கு ஜீவனாம்சம் அளிப்பது கட்டாயமில்லை – உயர்நீதிமன்றம் தீர்ப்பு

🔥 Views : 6
👁 Reading Now : 68

🔊To listen to this news in Tamil, Please select the text.

முஸ்லிம் அல்லாத மனைவிக்கு விவாகரத்துக்குப் பின்னர் கணவரிடமிருந்து ஜீவனாம்சம் தருவது கட்டாயம் இல்லையென்று கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி Evrol Mariette Peters (எவ்ரொல் மரியெட் பீட்டர்ஸ்) தீர்ப்பளித்துள்ளார்.
இப்போது காலம் மாறி விட்டதாகவும் பெரும்பாலான மனைவிமார்கள் வேலைக்குச் செல்வதால் அவர்கள் முன்னாள் கணவர் தரும் ஜீவனாம்சத்தை நம்பியிருக்கும் நிலை இல்லையென்பதால், அந்தத் தீர்ப்பை வழங்கியிருப்பதாகக் குறிப்பிட்டார்.
புதிய சட்டத்தின் வழி மனைவியின் வருமானம், பொருளாதார அடிப்படையில் ஜீவனாம்சம் பெற தகுதியுண்டா என்பதை நீதிபதி தீர்மானிக்க சட்டம் அனுமதிக்கின்றது.
2007இல் திருமணம் செய்து கொண்ட கோவ் எனும் மாது 2016இல் விவாகரத்து பெற்றபோது அவரின் நிதி நிலை திருப்திகரமாக இருப்பதால், அவருக்கு முன்னாள் கணவர் ஜீவனாம்சம் தரத் தேவையில்லை என்றும் அவரின் இரு பிள்ளைகளுக்கு முன்னாள் கணவர் மாதமொன்றுக்கு 4,000 ரிங்கிட் பராமரிப்புச் செலவுக்குப் பணம் தந்தால் போதுமென நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles