
🔊To listen to this news in Tamil, Please select the text.
இரு வாரங்களுக்கு முன்னர் பெர்சத்துவின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) யின் தலைவர் அஸாம் பாக்கி அறிவித்துள்ளார்.
கோவிட் பெருந்தொற்று காலத்தில் பொருளாதார நடவடிக்கைகளின் ஊக்குவிப்புத் திட்டத்தில் 9,250 கோடி ரிங்கிட்டில் முறைகேடு நடந்துள்ள சந்தேகத்தின் பேரில், அதன் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், அத்திட்டத்தின் குத்தகைகளைப் பெற்றுத் தருவதற்கு 3 லிருந்து 5 விழுக்காடு வரை லஞ்சம் வாங்கிய தனியார் நிறுவன செயல்முறை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டதோடு, அதில் முறைகேடாக ஈடுபட்டிருந்த பலரும் கைது செய்யப் பட்டுள்ளனர்.



