
🔊To listen to this news in Tamil, Please select the text.
கெடாவின் மாநிலத் தேர்தலை நடத்தும் விதமாக சட்டமன்றம் ஜூன் 18ஆம் தேதிக்குப் பின்னரே கலைக்கப்படும் என மந்திரி பெசார் சனுசி நோர் தெரிவித்தார்.
நோன்புப் பெருநாள் மார்ச் மாதமும், ஹஜ்ஜுப் பெருநாள் ஏப்ரல் மாதமும் வருவதால் மக்கள் ஹஜ்ஜுப் பெருநாளுக்கு மக்காவுக்கு செல்ல வேண்டியுள்ளதோடு, ஜூன் 18ஆம் தேதி கெடா சுல்தானின் பிறந்த நாள் வருவதாலும் அதற்குப் பின்னரே கெடாவின் ஆட்சிக் குழுவைக் கலைக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் பாஸ் கட்சியின் கீழ் செயல்படும் கெடா, கிளந்தான், திரெங்கானு, மற்றும் பக்காத்தான் ஆட்சியின் கீழிருக்கும் சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பினாங்கு மாநிலத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.



