
🔊To listen to this news in Tamil, Please select the text.
நஜிப் ரசாக்கிற்கு எதிரான 230 கோடி ரிங்கிட் சம்பந்தப்பட்ட 1எம்டிபி நிதி முறைகேட்டு வழக்கை அரசின் சார்பில் நடத்தி வந்த பிரபல வழக்கறிஞர் கோபால் ஸ்ரீராம் அண்மையில் காலமானதை அடுத்து, அந்த வழக்கை அரசு வழக்கறிஞர்கள் நடத்துவார்கள் என சட்டத்துறைத் தலைவர் டான்ஸ்ரீ Idrus Harun’s (இட்ருஸ் ஹருண்) அறிவித்திருந்தார்.
அது சம்பந்தமாகக் கருத்து தெரிவித்த சில வழக்கறிஞர்கள் அந்த வழக்கை கோபால் ஸ்ரீராம் எந்தவொரு கட்டணத்தையும் பெறாமல் நடத்தி வந்துள்ளதாகவும் அது பெருந் கொகையைக் கொண்டதாகவும் மிகவும் சிக்கலான, வெளிநாட்டு நபர்களையும் உள்ளடக்கியதாகவும் ஆயிரக் கணக்கான ஆவணங்களைக் கொண்டதாகவும் இருப்பதால், ஒரு மூத்த, நிபுணத்துவமும் அனுபவமும், சிறந்த தனியார் நிறுவன வழக்கறிஞரால்தான் சிறப்பாக நடத்த முடியும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வழக்கு உலகத்தோரின் கவனத்தை ஈர்த்து வருவதால், சட்டத்துறைத் தலைவர் அந்த வழக்கை நடத்த சரியான முடிவை எடுக்க வேண்டுமென வழக்கறிஞர்கள் Rafique Rashid (ரஃபிக் ரஷிட் அலி), Syed Iskandar Syed Jaafar சைட் (இஸ்கண்டார் சைட் ஜாபார்), Guok Ngek Seong (குவோக் ஙெக் சியோங்) ஆகியோர் கேட்டுக் கொண்டனர்.
நஜிப்பின் 1எம்டிபி, தணிக்கை அறிக்கையில் திருத்தம் செய்யப்பட்டது, ரோஸ்மா மன்சோரின் சூரியசக்தி குத்தகைத் திட்ட வழக்குகளிலும் கோபால் ஸ்ரீராம் அரசின் சார்பில் ஆஜாராகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



