31.8 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

அமைச்சரவையில் லஞ்சம் என்பதற்கான தடயம் எதுவுமில்லை

🔥 Views : 2
👁 Reading Now : 51

🔊To listen to this news in Tamil, Please select the text.

தாம் ஆட்சிக்கு வந்த பின்னர் தமது அமைச்சர்கள் ஊழலில் ஈடுபட்டதற்கான தடயம் எதுவும் இல்லையென்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். 
ஊழலைத் தடுக்கும் தமது நிலைப்பாட்டில் மாற்றம் எதுவுமில்லை என்றும் அமைச்சர்கள் நேர்மையாகப் பணியாற்றுவதாகவும் அவர் உறுதி கூறினார்.
பல ஊழல் வழக்குகளை எதிர்நோக்கி இருக்கும் அமாட் ஸாஹிட் ஹமிடியை துணைப் பிரதமராக்கியதில் தாம் அவரின் ஊழலை ஏற்றுக் கொண்டாதாகப் பொருள் கொள்ளக் கூடாதென்றும் அவர் தம்மைத் தற்காத்துக் கொள்ள அவகாசம் கொடுக்க வேண்டும். மேலும்,  நீதிமன்ற விசாரணை நேர்மையாக நடக்கும் என்று தாம் உறுதியாக நம்புவதாகவும் தெரிவித்தார்.
கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு  தற்போது அரசியல் நிலைத் தன்மை சிறப்பாக இருப்பதாகவும் கூட்டணிக் கட்சியினரிடையே எவ்வித கருத்து வேறுபாடும் இல்லையென்றும் அன்வார் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles