
🔊To listen to this news in Tamil, Please select the text.
வசதி குறைந்தோரின் சுமையைக் குறைக்க பிப்ரவரி 1 முதல் அரசு தொடங்கிய ‘ரஹ்மா மெனு’ எனும் உணவுத் திட்டம் மக்களின் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
நகர்ப்புறங்களில் வாழும் வசதி குறைந்த மக்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக இருப்பதாகவும் இதற்கு முன்னர் சாதாரண உணவுக்கு 7 ரிங்கிட்டுக்கு மேல் செலவழித்த நிலை மாறி, 5 ரிங்கிட்டுக்குப் பெறுவது பேருதவியாக இருப்பதாகப் பெரும்பாலோர் குறிப்பிட்டுள்ளனர்.
உணவகங்களுக்கு குடும்பத்தோடு சென்று உணவருந்த முடியாமல் இருந்தோர், இப்போது அவ்வாறு செய்ய முடியும் என்று சொல்லப்படுகிறது.
இத்திட்டத்தை நகர்ப்புறங்களோடு எல்லா இடங்களுக்கும், எல்லாப் பிரிவு மக்களுக்கும் விரிவு படுத்த வேண்டுமென்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.



