
🔊To listen to this news in Tamil, Please select the text.
கடந்த சனிக்கிழமை தமிழ்த் திரையுலக இசையமைப்பாளர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி புக்கிட் ஜாலில் தேசிய அரங்கில் நடைபெற்றது.
அதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து பரவசம் ஆயினர். அந்த கலைநிகழ்ச்சியை “fatinamyralee” எனும் நபர் கடுமையாக விமர்சித்து அதில் கலந்து கொண்டோர் ‘நாற்றம் பிடித்தவர்கள்’ என்று நிந்தனையான செய்தியை ஊடகங்களில் வெளியிட்டதை அடுத்து, அது சம்பந்தமாகப் பலரும் புகார் அளித்துள்ளனர்.
இந்த நிந்தனையானது பொது அமைதிக்குப் பங்கத்தை ஏற்படுத்துவதோடு இன உணர்வைத் தூண்டுவதாக இருப்பதால், அது சம்பந்தமாக கோப்பு திறக்கப்பட்டு குற்றவியல் சட்டம் பிரிவு 504இன் கீழ் விசாரணை நடத்தப்படுவதாக செராஸ் போலீஸ் தலைவர் Zam Halim Jamaluddin (ஸாம் ஹலிம் ஜமாலுடின்) தெரிவித்தார்.



