
🔊To listen to this news in Tamil, Please select the text.
தற்போது காலை 7.30 மணிக்குத் தொடங்கி மதியம் 1 மணிக்கு முடிவடையும் பள்ளி நேரத்தை மாற்றி காலை 8 மணிக்குத் தொடங்க வேண்டுமென்ற பரிந்துரை கடும் கண்டனத்துக்கு உள்ளானது.
பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர்கள் அனுபவிக்கும் பெரும் துன்பத்தைக் களைய பள்ளி நேரத்தை 8.00 மணிக்குத் தொடங்க வேண்டுமென தேசிய பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளர் அனுவார் அமாட் கூறியுள்ளது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நேர மாற்றம் எல்லாத் தரப்பு மக்களுக்கும் பெரும் சங்கடத்தையும் தொல்லையையும் கொடுக்கும் என்றும் நேர மாற்றம் ஏற்பட்டால், பெற்றோர்கள் குறித்த நேரத்தில் வேலைக்குச் செல்ல முடியாது என்றும் அது தேவையற்ற கஷ்டத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



