
🔊To listen to this news in Tamil, Please select the text.
முட்டிக்கால் வரையிலான பெர்மூடா சிலுவாரை அணிந்து போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்ற மாது ஒருவரை, அவரின் உடையைக் காரணம் காட்டி உள்ளே நுழைவதிலிருந்து தடுக்கப்பட்டார்.
தமக்கு ஏற்பட்ட கார் விபத்து சம்பந்தமாகப் புகார் அளிக்க செராஸ் பத்து செம்பிலானுக்குச் சென்ற அவரை காஜாங் போலீஸ் நிலையத்திற்குச் செல்லும்படி கூறியதால், அங்கு அவருக்கு அந்தக் கசப்பான அனுபவம் நேர்ந்ததாகத் தெரிவித்தார்.
பத்து செம்பிலானில் தாம் அணிந்திருந்த உடை பற்றி எதுவும் தெரிவிக்காத நிலையில், காஜாங் போலீஸ் நிலையைத்தில் தம்மை அனுமதிக்க மறுத்தது அராஜகம் என அவர் குறிப்பிட்டார்.
தம்மைத் தடுத்த அதிகாரியின் பெயரையும் அணிந்திருந்த சின்னத்தின் எண்ணையும் அவர் கொடுக்க மறுத்து விட்டதாக அந்த மாது தெரிவித்தார். இது சம்பந்தமாகத் தாம் காஜாங் சட்டமன்ற உறுப்பினர் Hee Loy Sian (ஹீ லோய் சியானிடம்) புகார் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.



