
🔊To listen to this news in Tamil, Please select the text.
நாடாளுமன்றத்தில் இன உணர்வைத் தூண்டுவதையும் பாலியல் ரீதியாகப் பேசுவதையும் தடுக்க, அவ்வாறு பேசுவோருக்கு 1,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும் என சபாநாயகர் Johari Abdul (ஜொஹாரி அப்துல்) தெரிவித்தார்.
இந்த அபராதமான தற்போதிருக்கும் நாடாளுமன்ற விதிக்கு உட்பட்டிருப்பதாகவும் எதிர்காலத்தில் அத்தொகை அதிகரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
முறை தவறி பேசுவோர் உரிமை செயற்குழுவினால் விசாரிக்கப்பட்டு, 6 மாத காலம் வரை நாடாளுமன்ற அவையிலிருந்து நீக்கி வைக்கப்படவும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் ஜொஹாரி அப்துல் தெரிவித்தார்.
இவ்வாண்டுக்கான முதல் சட்டமன்றத் தொடர் பிப்ரவரி 14இல் தொடங்கி மார்ச் 30இல் முடிவடையும் என அறிவிக்கப்பட்டது.



