28.8 C
Kuala Lumpur
Thursday, April 23, 2026

Vetri

கை சுத்தமானவர்கள் ஊழல் விசாரணைக்குப் பயப்படுவது ஏன்?

🔊To listen to this news in Tamil, Please select the text.

நிதி முறைகேட்டிலும் ஊழலிலும் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளின் மீது ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை நடத்துவது வழக்கமானது என்றும் ஊழலில் ஈடுபடாத கட்சிகள் விசாரணைக்கு அஞ்சத் தேவையில்லை என்றும் பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
கோவிட் காலத்தில் ஊக்குவிப்புத் திட்டத்தில் 9,250 கோடி ரிங்கிட் முறைகேடு செய்த சந்தேகத்தின் பேரில் பெர்சத்துவின் 30 கோடி ரிங்கிட் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டதை எதிர்த்து முஹிடின் யாசின் சாடியதைக் குறிப்பிட்ட அன்வார், 2018ஆம் ஆண்டில் 1எம்டிபி விவகாரத்தில் அம்னோவின் வங்கிக் கணக்கை அப்போதைய உள்துறை அமைச்சராக இருந்த முஹிடின் யாசின் முடக்கியதாகக் குறிப்பிட்டார்.
இந்நிலையில், பொதுத்தேர்தலின்போது தனியார் நிறுவனங்கள் பல, பெருந்தொகையைத் தேர்தல் நன்கொடையாக பெர்சத்துவுக்கு வழங்கியதாக அக்கட்சியின் துணைத் தலைவர் ஃபைசால் அஸுமு தெரிவித்திருந்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles