
🔊To listen to this news in Tamil, Please select the text.
தமது புதல்வியின் பொருளாதர ஆலோசகர் நியமனத்தைத் தற்காத்துப் பேசியிருக்கும் பிரதமர் அன்வார் இப்ராஹிம், பதவியில் இருந்த சிலர் கோடிக்கணக்கான அரசின் குத்தகையை தங்களது மகனுக்கும் மருமகனுக்குத் தாரை வார்த்துக் கொடுத்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.
அது பற்றிக் குறிப்பிட்ட அம்னோ உச்சமன்ற உறுப்பினர் புவாட் ஸர்க்காசி, அம்மாதிரியான குத்தகைகளைப் பெற்ற மகன்கள், மருமகன்கள் யாரென்று அன்வார் தெளிவாகக் குறிப்பிட வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
2020இல் முஹிடின் யாசின் உள்துறை அமைச்சராக இருந்தபோது, 350 கோடி ரிங்கிட் பெறுமான வெளிநாட்டு விசா குத்தகையை அவரது மருமகன் அட்லான் பெர்ஹான் மூலம் தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாகவும் அத்திட்டத்தின் உண்மையான செலவு 120 கோடி ரிங்கிட் மட்டுமே என செய்தி வெளியிடப்பட்டது.
எனவே, இது உண்மையானால் அன்வார் இதில் தனிக்கவனம் செலுத்ந்தி, விசாரணையை முடுக்கிவிட்டு, குற்றவாளிகளுக்குத் தண்டனை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென புவாட் ஸர்க்காசி கேட்டுக் கொண்டார்.
