25.2 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

பட்டாசுக்கான தடையை நீட்டிக்க வேண்டும்

🔥 Views : 10
👁 Reading Now : 46

🔊To listen to this news in Tamil, Please select the text.

பட்டாசு வெடிப்பதற்கான தடையை அகற்ற அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ளதை மீட்டுக் கொள்ள வேண்டுமென மலேசிய குழந்தைகள் நல மருத்துவச் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
வான வெடி மற்றும் பட்டாசு வெடிப்பிற்கான தடை 1955இல் இருந்து அமலில் இருந்து வருகிறது. பல நாடுகளும் அதற்கான தடையை விதித்துள்ளன.
இந்நிலையில், பட்டாசு வெடிப்பில் சிறார்களே பெரும் விபத்துக்குள்ளாகி பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ஆயிரக் கணக்கான சிறார்கள் பார்வை இழந்து, உடலுறுப்புகள் துண்டிக்கப்பட்டு, நிரந்தர இழப்புக்கு ஆளாகி இருக்கின்றனர். சொத்துகளுக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டிருப்பதாக மலேசிய குழந்தைகள் நல மருத்துவர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இந்தக் காரணங்களை மனதில் கொண்டு, வான வெடிக்கும் பட்டாசுக்கும் விதிக்கப்பட்ட தடையைத் தொடர வேண்டுமென சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles