
🔊To listen to this news in Tamil, Please select the text.
அம்னோ தலைவர் அமாட் ஸாஹிட் ஹமிடியின் அனைத்துலகக் கடப்பிதழை நிரந்தரமாக ஒப்படைக்க முடியாது என உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பானது அவருக்குக் கடும் நெருக்கடியைத் தந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
தம்மீது சுமத்தப்பட்டிருக்கும் 47 கிரிமினல் குற்றங்களை எதிர்கொண்டு தம்மை நிரபராதி என்று நிரூபித்த பின்னர், ஸாஹிட் தமது கடப்பிதழைப் பெற முயல வேண்டுமென்றும் அவர் அவசரப்பட்டு துணைப் பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கக் கூடாதென்று அம்னோவின் தலைவர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.
நீதிமன்றத்தில் ஊழல் வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது, அவர் எவ்வாறு அமைச்சரவையில் சிறப்பாகச் செயல்பட முடியும் என்றும் கேள்வியும் எழுப்பப்படுகிறது.
