25.2 C
Kuala Lumpur
Sunday, September 27, 2026

Vetri

தேசிய முன்னணியில் மஇகா இருக்கின்றதா என்பது சந்தேகமே!

🔥 Views : 23
👁 Reading Now : 36

🔊To listen to this news in Tamil, Please select the text.

மஇகா தேசிய முன்னணியில் அங்கம் வகித்தாலும் அதற்கு எந்த மரியாதையும் கொடுக்கப்படாமல் புறக்கணிக்கப்படுவதாக மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான எம். சரவணன் குறிப்பிட்டார்.
மாநிலத் தேர்தல்கள் நெருங்கி வருவதால் அது சம்பந்தமாகத் தேசிய முன்னணியின் தயார் நிலையும் தொகுதி ஒதுக்கீடும் எவ்வாறு இருக்கும் என்று தெரியவில்லை என்றும் இதுவரை அது சம்பந்தமாக மஇகாவுடன் எந்தவொரு கலந்தாய்வும் நடத்தப்படவில்லை என்பது வேதனையளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
மஇகாவுக்கு இந்தியர்களின் ஆதரவு சற்று குறைந்திருந்தாலும் அது இன்னமும் தேசிய முன்னணியின் வெற்றிக்கு உதவும் நிலையில்தான் இருப்பதை அம்னோ உணர வேண்டுமென்று சரவணன் வலியுறுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles