31.8 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

பக்காத்தானுக்கு 31 விழுக்காடு மலாய்க்காரர்களின் ஆதரவு உள்ளது

🔥 Views : 7
👁 Reading Now : 64

🔊To listen to this news in Tamil, Please select the text.

கடந்த பொதுத்தேர்தலில் பக்காத்தானுக்கு வெறும் 19 விழுக்காடு மலாய்க்காரர்களின் ஆதரவு மட்டுமே இருந்ததாகக் கூறப்படுவதை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வன்மையாக மறுத்தார்.
பக்காத்தான் ஹராப்பான் 82 தொகுதிகளை வென்று 31 விழுக்காடு மலாய்க்காரர்களின் ஆதரவைப் பெற்றிருப்பதாக அவர் ஆணித்தரமாகக் குறிப்பிட்டார்.
கிளந்தான், திரெங்கானு மாநிலங்களில் பக்காத்தானுக்கு மலாய்க்காரர்களின் ஆதரவு குறைந்திருந்தாலும் சிலாங்கூர், பினாங்கு, கூட்டரசுப் பிரதேசம், நெகிரி செம்பிலான் போன்ற மாநிலங்களில் 50 விழுக்காடு வரையில் ஆதரவு கிடைத்துள்ளது.
ஒற்றுமை அரசாங்கத்தில் இணைந்திருக்கும் பக்காத்தான், தேசிய முன்னணி, ஜிபிஎஸ், ஜிஆர் எஸ் மற்றும் சில கட்சிகளுக்குக் கிடைத்த வாக்குகள், மூன்றில் இரண்டு மடங்கு ஆதரவைப் பெற்றுள்ளன.
இதனைக் கொண்டு ஒற்றுமை அரசு வலுவான நிர்வாகத்தை நடத்தி நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த நிச்சயமாக முடியும் என அன்வார் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles