27.6 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

புதிய பட்ஜெட் நாடு எதிர்நோக்கும் சவால்களை மனதில் கொண்டு வரையப்படுகிறது

🔥 Views : 9
👁 Reading Now : 68

🔊To listen to this news in Tamil, Please select the text.

2023ஆம் ஆண்டுக்கான மறு பட்ஜெட்டானது பிப்ரவரி 24ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் அது கால சூழ்நிலையின் பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் வகையில் வரையப்படுவதாகப் பிரதமரும், நிதியமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
பொருளாதாரம் மீட்சி பெறவும், முதலீட்டாளர்களைக் கவரவும், நாட்டின் போட்டித் தன்மையை உருவாக்கி, வர்த்தக அனுமதியை விரைவாகத் தரவும், வர்த்தக செயல்பாடுகளை டிஜிட்டல் மயமாக்கவும், பயனீட்டை ஊக்குவிக்கவும் இயற்கை வளத்தைப் பெருக்கவும் திட்டங்கள் வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
மேற்கண்ட துறைகளில் அண்டை நாடுகளான இந்தோனேசியா, தாய்லாந்து, வியட்நாம் நாடுகளுக்குப் போட்டியிடும் தன்மைக்கான திட்டங்களும் இடம்பெறும்.
இந்தப் பட்ஜெட்டில் மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை தரவதோடு, எப்பிரிவினரும் ஒதுக்கப்பட மாட்டார்கள் என்றும் அன்வார் நிதியமைச்சின் மாதாந்திரக் கூட்டத்தில் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles