
🔊To listen to this news in Tamil, Please select the text.
தனிநபர் வாகனங்களில் இன்று தொடங்கி, Roadtax சாலை வரியை காட்சிக்கு வைக்க தேவையில்லை என, போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார். மாறாக, JPJ சாலை போக்குவரத்து துறையின் அகப்பக்கத்திலுள்ள, e-LKM மற்றும் e-LMM வாயிலாக அல்லது விவேக கைபேசிகளில் MyJPJ செயலியை பதிவிறக்கம் செய்வதன் வாயிலாக, வாகனமோட்டிகள் தங்கள் சாலை வரியை எளிதாக பயன்படுத்த முடியும். JPJ சாலை போக்குவரத்து துறையின், சாலை வரி மற்றும் ஒட்டுனர் உரிமத்தை புதுப்பிப்பது, போன்ற முக்கிய சேவைகளை இலக்கவியல்மயமாக்கும் திட்டத்திற்கு ஏற்ப அந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. முதலில் மோட்டார் சைக்கிள்கள் உட்பட தனிநபர் வாகனங்களை மட்டுமே உட்படுத்தி அறிவிக்கப்பட்டிருக்கும் அந்த திட்டம் பின்னர் கட்டங் கட்டமாக இதர பிரிவுகளுக்கும் விரிவுப்படுத்தப்படும் என அந்தோணி லோக் தெரிவித்தார்.



