
🔊To listen to this news in Tamil, Please select the text.
அண்மையில் அம்னோ பொதுப் பேரவையில் கட்சியின் மேல்மட்ட இரு பதவிகளுக்குப் போட்டி இருக்கக் கூடாதென்ற தீர்மானம் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது கட்சிக்குள் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.
அந்தத் தீர்மானம் கட்சியின் துணை விதி பிரிவு 10க்கு முரணாக இருப்பதாகவும் பொதுப் பேரவை கூடுவதற்கு 14 நாள்களுக்கு முன்னரும் உச்சமன்ற கூட்டம் நடப்பதற்கு 7 நாள்களுக்கு முன்னதாகவும் அறிவிக்கப்படவில்லை என்பதை சங்கங்களின் பதிவதிகாரி (ஆர்ஓஎஸ்) விசாரணை செய்ய வேண்டுமென கட்சியின் இரு உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதனையடுத்து, அந்தத் தீர்மானம் சம்பந்தமாகத் துல்லியமான விளக்கத்தை அம்னோ 60 நாள்களுக்குள் வழங்க வேண்டுமென சங்கங்களின் பதிவதிகாரி உத்தரவிட்டுள்ளார்.



