33.5 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

பினாங்கு தவணைக் குத்தகைக்கு விடப்பட்ட மாநிலமா?

🔥 Views : 6
👁 Reading Now : 60

🔊To listen to this news in Tamil, Please select the text.

பினாங்கு, கெடாவுக்கு சொந்தமானது என்றும் அது தவணைக் குத்தகைக்கு விடப்பட்டதாக கெடா மந்திரி பெசார் Sanusi Nor (சனுசி நோர்) அலோர் ஸ்டாரில் இளைஞர் சந்திப்பின்போது பேசியது, ஜனவரி 26ஆம் தேதி முகநூலில் பதிவிடப்பட்டிருந்தது.
சனுசி அதனைக் கெட்ட நோக்கத்தோடு கூறியிருப்பதாக ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர் எஸ் என் ராயர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
பினாங்கு தன்னாட்சி பெற்ற தனி மாநிலம் என்று அரசமைப்பு விதி குறிப்பிடும்போது, சனுசி அதற்கு முரணாகவும் பேரரசரை துச்சமென மதித்தும் பினாங்கை கெடாவின் மாநிலம் என்று கூறியிருக்கிறார். அது அமைதிக்கு பங்கம் விளைவிப்பதோடு, அரசமைப்பு விதிக்கு எதிராகக் கேள்வி எழுப்புவதாக ராயர் குற்றம் சாட்டினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles