33.5 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

ஏஆர் ரஹ்மானின் கலைநிகழ்ச்சியை இனவாதமாக விமர்சித்த ஹாக்கி விளையாட்டாளர் இடைநீக்கம்

🔥 Views : 10
👁 Reading Now : 60

🔊To listen to this news in Tamil, Please select the text.

கடந்த மாதம் புக்கிட் ஜாலில் அரங்கில் நடந்த இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை ‘நாற்றமெடுத்த நிகழ்ச்சி’ என இனவாதமாக விமர்சித்த ஹாக்கி விளையாட்டாளர் Hanis Nadiah Onn (ஹானிஸ் நாடியா ஓன்) ஹாக்கி விளையாட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ஹாக்கி சம்மேளனத்துடன் கூட்டாக விசாரணை நடத்தி பின்னர், அந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் கம்போடியாவில் நடைபெறவிருக்கும் சீ விளையாட்டுப் போட்டியில் பங்கெடுக்க ஹானிஸுக்கு அதிமதியில்லை என்று இளைஞர், விளையாட்டு அமைச்சு அறிவித்துள்ளது.
மேற்கண்ட இன நிந்தனையான செய்தியை ஹானிஸ் தமது இன்ஸ்டாக்ராமில் தொடர்ந்து வெளியிட்டு பிரச்சினையையும் இன நல்லிணக்கத்திற்கு சிறுமையையும் இன உணர்வையும் மோதலையும் தூண்டும் வகையில் அமைந்திருப்பதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
ஹானிஸ் தமது பங்கிற்கு, தாம் நகைச்சுவைக்காகவே அந்தச் செய்தியைத் தவறுதலாக வெளியிட்டிருந்ததாகவும் அதற்காகத் தாம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles