
🔊To listen to this news in Tamil, Please select the text.
கார் விற்பனை மையம், பட்டறை, குறிப்பிட்ட வாகன நிறுத்துமிடம் ஆகியவற்றிலிருந்து விலையுயர்ந்த கார்களைக் கொள்ளையிட்டு வந்த ஒரு கும்பலை போலீஸார் கைது செய்தள்ளனர்.
அந்தக் கும்பல் வாடிக்கையாளர்களாகவும், கார் உரிமையாளர்களாகவும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு விலையுயர்ந்த கார்களைக் கொள்ளையடித்துச் செல்வது கண்டறியப்பட்டுள்ளது.
இம்மாதிரியான நடவடிக்கைகைகள் கோலாலம்பூர், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜொகூர், பகாங் ஆகிய மாநிலங்களில் நடப்பதாகவும் பெரும்பாலும் மெர்சீடிஸ் பென்ஸ், தொயோத்தா, ஹோண்டா, வோல்ஸ்வேகன் ஆகிய கார்களைக் கார் திருடும் கும்பல் கொள்ளையிட்டு வருகிறது.
கொள்ளையிடப்படும் கார்களைத் தாய்லாந்துக்கு கடத்திச் சென்று கொள்ளை லாபம் சம்பாதித்துள்ளது. அது சம்பந்தமாக 14 பேர் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளதோடு 5 விலையுயர்ந்த கார்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன
எனவே, கார் உரிமையாளர்கள் அவற்றை எங்கு விட்டு வைத்தாலும், நிறுத்தி வைத்தாலும், அவற்றைக் கண்காணிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.



