26.4 C
Kuala Lumpur
Thursday, April 23, 2026

Vetri

வீடு புகுந்து கொள்ளையிட்ட 5 முகமூடிக் கொள்ளையர்கள் தேடப்படுகின்றனர்

🔊To listen to this news in Tamil, Please select the text.

தாமான் பெட்டாலிங் கிள்ளானில் வீடு புகுந்து, 4,000 ரிங்கிட் ரொக்கம், 20,000 ரிங்கிட் மதிப்புடைய தங்க நகைகளைக் கொள்ளையிட்டுச் சென்ற ஐந்து கொள்ளையர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
வீட்டின் பின்பக்கக் கதவைத் திறந்து, உள்ளே புகுந்த கொள்ளையர்கள், வீட்டில் இருந்தவர்களை இரு அறைகளில் தள்ளி, பூட்டிய பின்னர், வீட்டை சல்லடையாகத் அலசி, 4,000 ரிங்கிட் ரொக்கம் 20,000 ரிங்கிட் பெறுமான நகைகளையும் 5 கைப்பேசிகளையும் கொள்ளையடித்த பின்னர், வீட்டின் பின்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் தப்பி ஓடியுள்ளனர்.
அதற்கு முன்னர், 45 வயது மாது ஒருவரை மூக்கில் குத்தியும் தலையில் கத்தியால் தாக்கியும் உள்ளனர்.
30லிருந்து 70 வயதுமிக்க அவர்கள் தப்பியோட பயன்படுத்தப்பட்ட கார் பின்னர் கிள்ளான், தாமான் டேசாவானில் கைவிடப்பட்ட நிலையில் கண்டு பிடிக்கப்பட்டது.
அவர்கள் பயன்படுத்திய காரின் எண் பட்டை போலியானது என்று கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களைத் தேடும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளதாக கிள்ளான் செலாத்தான் போலீஸ் தலைவர் Cha Hoong Fong (சா ஹூங் ஃபோங்) தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles