
🔊To listen to this news in Tamil, Please select the text.
சட்டத்துறைத் தலைவர் டான்ஸ்ரீ Idrus Harun (இட்ருஸ் ஹருணின்) பதவிக் காலத்தை மேலும் 6 மாத காலத்திற்கு நீட்டித்திருப்பதை சிலர் சமூக ஊடகங்களில் விமர்சித்து வருவது பிரச்சினையை ஏற்படுத்தி வருகிறது.
அது பற்றிக் குறிப்பிட்ட சட்டத் துறை அமைச்சர் Azalina Osman (அஸாலினா ஒஸ்மான்), அந்தp பதவிக் கால நீட்டிப்பை பிரதமர் அன்வார் இப்ராஹிமே மேற்கொண்டதாகவும் அதில் தாம் சம்பந்தப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
இட்ருஸ் ஹருண் தமது பணியில் இன்னும் சிலவற்றைச் செய்து முடிக்க வேண்டியிருப்பதால், பிரதமர் அவரின் பதவிக் காலத்தை நீட்டித்திருக்கலாம் என்றும் தெரிவித்தார்.
இட்ருஸ் ஹருணின் பதவி நீட்டிப்பை அரசமைப்பு விதி பிரிவு 145 (1)இன் கீழ் பேரரசர் அங்கீகரித்துள்ளதாகவும் அஸாலினா தெரிவித்தார்.
