
🔊To listen to this news in Tamil, Please select the text.
நாட்டில் முட்டை தட்டுப்பாட்டை நிவர்த்திக்க நேரடி ஒப்பந்தத்தின் மூலம் J&E Advance Tech Sdn Bhd நிறுவனத்திற்கு சிறப்பு உரிமம் தரப்பட்டு இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதி செய்யப்பட்டதாக விவசாயம், உணவு பாதுகாப்புத் துறை அமைச்சர் Mohamad Sabu (முகமட் சாபு) தெரிவித்தார்.
நெருக்கடியான காலகட்டத்தில் வெளிப்- படையான டெண்டர் முறையில் முட்டை இறக்குமதி செய்ய முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார். உள்நாட்டில் முட்டை உற்பத்தி அதிகரிக்குமானால், வெளிநாடுகளில் இருந்து முட்டை இறக்குமதி நிறுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதி செய்ய எத்தனை நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது, அது எம்மாதிரியான அழைப்- பாணை என எதிர்க்கட்சிகள் மக்களவையில் பிரச்சினையை எழுப்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
