
🔊To listen to this news in Tamil, Please select the text.
பெரிக்காத்தான் தாக்கல் செய்த வரவு செலவு அறிக்கையை விட 2023ஆம் ஆண்டுக்கான தாம் சமர்ப்பித்த பட்ஜெட் சிறப்பானது என பிரதமர் அன்வார் இப்ராஹிம் மக்களவையில் தெரிவித்தார்.
தமது பட்ஜெட்டில் கிளந்தான் திரெங்கானுவுக்கு போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பொய்யான தோற்றத்தை ஏற்படுத்தியிருப்பதை அவர் சாடியதோடு கிளந்தான், திரெங்கானு, பெர்லிஸ் ஆகிய மாநிலங்களுக்கு பெரிக்காத்தான் ஒதுக்கிய மேம்பாட்டு நிதியை விட தாம் அதிகமாகவே ஒதுக்கியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
மேலும், கிளந்தானுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 150 கோடியும், பெர்லிஸுக்கு 57 கோடி ரிங்கிட்டும் ஒதுக்கப்பட்டதாகவும் கூடிய விரைவில் அந்த மாநிலங்களுக்குக் கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.



