29.6 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

2025ஆம் ஆண்டு வாக்கில் 40,000 மருத்துவ உதவியாளர்கள் தேவை

🔥 Views : 4
👁 Reading Now : 28

🔊To listen to this news in Tamil, Please select the text.

2025ஆம் ஆண்டு வாக்கில் நாட்டின் மக்கள் தொகை 26 மில்லியனாக அதிகரிக்கும் வேளையில், மருத்துவ உதவியாளர்களின் எண்ணிக்கையை 44,804 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார துணையமைச்சர் Lukanisman Awang Sauni (லுகானிஸ்மான் அவாங் சவுனி) மக்களவையில் தெரிவித்தார்.
தற்போது நாட்டில் 23,329 மருத்துவ உதவியாளர்கள் இருப்பதாகவும் அது மக்கள் தொகையில் 1,400 பேருக்கு ஒருவர் என்ற விகிதாசாரத்தில் இருப்பதாகத் தெரிவித்தார்.
மருத்துவ உதவியாளர் பற்றாக்குறையினால், நடப்பில் இருப்போரின் வேலை பளுவும் அவர்களுக்கான மிகைநேர ஊதியமும் அதிகரித்துள்ளது.
தற்போது பட்டதாரிகள் அப்பதவிகளில் வெறும் 10 விழுக்காடாக இருப்பதை அதிகரிப்பதோடு 2030 ஆம் ஆண்டு வாக்கில் அந்த மருத்துவ உதவியாளர் எண்ணிக்கை 75 விழுக்காடாக அதிகரிக்கப்படும் என்றும் அவர் மக்களவையில் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles