
🔊To listen to this news in Tamil, Please select the text.
செந்தூலை சேர்ந்த இளைஞர் கேப்ரியல் ஷால் என்பவர் இறந்த பின்னர், அவருக்கு சம்பந்தமில்லாத தம்பினில் உள்ள குடும்பத்திடம் அவர்களின் மகன் லெட்சுமனன் இறந்து விட்டதாக சிறைத் துறை அறிவித்திருந்தது.
லெட்சுமனனின் குடும்பத்தார் இறுதிக் காரியத்திற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்த பின்னர், கடைசி நிமிடத்தில் அது தவறான செய்தி என்றும் தங்களது மகன் இன்னமும் உயிரோடு இருப்பதாகவும் அறிந்தனர்.
இந்நிலையில், கேப்ரியல் இறந்த செய்தியை அவரது குடும்பத்தினரிடம் சிறைத் துறை தெரிவிக்கவில்லை என்பது கண்டறியப்பட்டது.
இது மேற்கண்ட இரு குடும்பத்தினருக்கும் பல சங்கடங்களையும் பிரச்சினைகளையும் உருவாக்கி இருப்பதால், அவ்விரு குடும்பத்தினரும் சிறை நிர்வாகம், போலீஸ் துறை, மருத்துவமனை நிர்வாகம் ஆகியவற்றின் மீது கூட்டாக வழக்கு தொடுக்க முடிவெடுத்துள்ளதாக வழக்கறிஞர் தினேஸ் தெரிவித்தார்.



