
🔊To listen to this news in Tamil, Please select the text.
ஜானா விபாவா பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தில் முறைகேடு செய்த குற்றத்தை டான்ஸ்ரீ முஹிடின் யாசின் மீது சுமத்தப்பட்டிருந்தாலும் பெர்சத்துவும் அதன் உறுப்பினர்களும் அவருக்கு அரணாக இருப்பதாக அதன் துணைத் தலைவர் Ahmad Faizal Azumu (அமாட் ஃபைஸால் அஸுமு) குறிப்பிட்டார்.
தலைவருக்கு கட்சியும் உறுப்பினர்களும் இறுதி வரை பாதுகாப்பாக இருப்பதோடு எந்த வழக்கையும் முறியடிக்க உறுதி பூண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
பெர்சத்துவைக் களங்கப்படுத்தி, அதன் ஒற்றுமையைக் குலைக்கும் வகையில் ஏவப்படும் எந்தவிதமான நடவடிக்கையையும் கட்சி நிச்சயமாக முறியடிக்கும் வல்லமையைப் பெற்றிருப்பதாக ஃபைஸால் குறிப்பிட்டார்.
இதனிடையே கட்சியின் தலைமைச் செயலாளர் ஹம்ஸா ஸைனுடின் கூறும்போது, முஹிடின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் கொடூரமானவை, பழிவாங்கும் நடவடிக்கை என குறிப்பிட்டார்.



