
🔊To listen to this news in Tamil, Please select the text.
யாரையும் பழி வாங்கும் நோக்கத்தில் தாம் பிரதமராகவில்லை என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று விளக்களித்துள்ளார்.
பூமிபுத்ரா குத்தகையாளர்களுக்கு உதவ தோற்றுவிக்கப்பட்ட ஜானா விபாவா பொருளாதாரத் திட்டத்தில் ஜொகூரில் உள்ள சீன நிறுவனத்திற்கு குத்தகை வழங்கப்பட்டது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
முஹிடினின் சீன நண்பர்களுக்கு அத்திட்டங்கள் வழங்கப்பட்டதில் ஊழல் நடந்திருக்கலாம் என்று எம்ஏசிசி சந்தேகிப்பதாலும் அத்திட்டத்தின் மூலம் முஹிடின் சுய லாபம் சம்பாதித்திருப்பதோடு பெர்சத்து கட்சிக்கு சட்ட விரோதமாகப் பணம் சேர்த்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இத்திட்டம் இஸ்மாயில் சப்ரி காலத்திலும் தொடர்ந்திருப்பால், எம்ஏசிசி அதனையும் விசாரிக்க நினைத்தால், அவ்வாறே செய்யலாம் என அவர் குறிப்பிட்டார்.
தங்கள் மீது குற்றமில்லை என்றால் அதனை முஹிடின் நிரூபித்து நிரபராதியாக வர பூரண உரிமை உள்ளது என்றும் அன்வார் குறிப்பிட்டார்.



