
🔊To listen to this news in Tamil, Please select the text.
திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் ஊழல் நடவடிக்கைகளை தடுக்கவும் தவிர்க்கவும் நாட்டின் மத்திய வங்கியான பேங்க் நெகாராவில் தலைமை மட்டத்தில் பிரதமர் அடியோடு மாற்றம் செய்ய வேண்டும் என்று சமூகப் பாதுகாப்பு பங்களிப்பாளர் ஆலோசனை மன்றம்-SPCAAM வேண்டுகோள் விடுத்துள்ளது.
பன்னாட்டு மோசடி கும்பல் உள்ளூர் நிதி நிறுவனங்களுக்குள் ஊடுறுவியதன் தொடர்பில் ஐந்து முக்கிய நிதி நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகள்மீது விசாரணை மேற்கொண்ட செய்தி வெளியாதற்குப் பிறகு, பேங்க் நெகாரா மலேசியா மீதான பொது நம்பிக்கை சிதைந்துவிட்டதாக அந்த மன்றம் கூறியுள்ளது.
சபந்தப்பட்ட ஐந்து வங்கிகளையும் விசாரணைக்கு உட்படுத்தாத நிலை, பேங்க் நெகராவின் திறமையின்மையை வெளிப்படுத்துகிறது. இதற்கிடையில், அந்த ஐந்து ஐந்து வங்கிகளின்மீது விசாரணை மேற்கொள்ளப்படவில்லை என்று பேங்க் நெகராவின் ஆளுநர் டான்ஸ்ரீ நோர் ஷம்சியா முகமட் யூனுஸ் தெரிவித்ததும் கவனத்தில் கொள்ளத்தக்கது.
குறிப்பாக, நாட்டில் நிலவும் திட்டமிட்ட ஊழலைத் தடுக்கமுடியாத நிர்வாக பலவீனத்தையும் இது வெளிச்சம்போட்டு காட்டுவதாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.


