32.9 C
Kuala Lumpur
Wednesday, April 22, 2026

Vetri

பாஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் சட்டமன்றங்கள் ஜூன் மாதத்தில் கலைக்கப்படும்

🔊To listen to this news in Tamil, Please select the text.

ஆறு மாநிலச் சட்டமன்றத் தேர்தல்கள் ஜூலை மாதம் நடைபெறும் என பாஸ் உதவித் தலைவரும் கிளந்தான் துணை மந்திரி பெசாருமான Amar Nik Abdullah (அமார் நிக் அப்துல்லா) தெரிவித்தார்.
இந்நிலையில் பாஸ் கட்சி ஆட்சியின் கீழுள்ள கெடா, கிளந்தான், திரெங்கானு சட்டமன்றங்கள் ஜூன் மாதம் கலைக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
ஜூன் மாத இறுதியில் கிளந்தான் சட்டமன்றம் கலைக்கப்பட்டு மற்ற இரு மாநில சட்டமன்றங்கள் படிப்படியாகக் கலைக்கப்படும் என்றும் அது ஜூன் மாதத்திலேயே நடைபெறுமென்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், பக்காத்தான் ஆட்சியில் உள்ள பினாங்கு, சிலாங்கூர், நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களில் ஜூன் மாதமே சட்டமன்றங்கள் கலைக்கப்படும் சாத்தியம் இருப்பதாக அமார் நிக் அப்துல்லா தெரிவித்தார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles