27.5 C
Kuala Lumpur
Friday, July 3, 2026

Vetri

மரண தண்டனைக் கைதி தங்கராஜுவிற்கு மறு விசாரணை கோரிக்கை

🔥 Views : 6
👁 Reading Now : 32

🔊To listen to this news in Tamil, Please select the text.

சிங்கப்பூரில் மரண தண்டனை விதிக்கப்பட்டு வரும் புதன்கிழமை தண்டனை நிறைவேற்றப்படக் காத்திருக்கும் தங்கராஜு சுப்பையாவின் வழக்கை மறு விசாரணை செய்ய வேண்டுமென அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2017இல் சிங்கப்பூருக்கு 1,017.9 கிராம் கேன்னபிஸ் போதைப்பொருளைக் கடத்தியதாக மரண தண்டனை விதிக்கப்பட்ட 46 வயதான தங்கராஜு நீதிமன்றத்தின் தீர்ப்பிற்காகக் காத்திருக்கிறார்.
அவரின் மரண தண்டனை அடுத்த வாரம் புதன் கிழமையன்று நிறைவேற்றப்பட விருப்பதால், அவருக்கு கருணை காட்டும்படி அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளதாக அவரது சகோதரி லீலாவதி சுப்பையா தெரிவித்தார்.
விடுதலையாவதற்கு எல்லாக் கதவும் அடைக்கப்பட்ட நிலையில், வழக்கை மறு பரிசீலனை செய்ய வேண்டுமென்ற கோரிக்கை ஏற்றுக் கொள்ள சாத்தியம் குறைவு என்றே சொல்லப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles