27.5 C
Kuala Lumpur
Friday, July 3, 2026

Vetri

பிணை முகப்புகள் மூடப்பட்டதால், ஆறு குற்றவாளிகள் பிணை கிடைக்காமல் அவதி

🔥 Views : 8
👁 Reading Now : 57

🔊To listen to this news in Tamil, Please select the text.

கடந்த வியாழக்கிழமை குற்றவாளிகளுக்கு கூட்டரசு நீதிமன்ற பிணை தரும் முகப்புகள் வழக்கத்திற்கு மாறாக மதியம் 2.53 மணிக்கே மூடப்பட்டதால், 6 குற்றவாளிகள் பெரும் அவதிக்கு உள்ளாயினர்.
திருட்டுக் குற்றம் ஒன்றில் கிரிமினல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட 6 பேருக்கு பிணை கொடுப்போர் முகப்புக்கு வந்தபோது, வழக்கமாக மூடப்படும் நேரமான 4.30 மணிக்கு முன்னதகவே முகப்பு மூடப்பட்டதால், அந்தக் குற்றவாளிகள் பிணையைப் பெற வரும் செவ்வாய்க்கிழமை வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அந்த அறுவரின் வழக்கறிஞர்கள் அது பற்றிப் புகார் கொடுத்தபோது, முகப்புகள் 4.30 மணி வரை திறந்தே இருந்ததாகவும் ஆனால், பிணைக்கு பொறுப்பேற்போர் முகப்புகளுக்கு வரவே இல்லையென நீதிமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles