
🔊To listen to this news in Tamil, Please select the text.
ஈப்போ, செம்மோரின் உள்ள Kinder Labz மழலையர் பள்ளிக்குச் சென்ற முதல் நாளே, ஏப்ரல் 17ஆம் தேதி வி. தனேஸ் நாயர் எனும் நான்கு வயது சிறுவன் பக்கத்துக் கட்டடத்தில் இருந்த பெரியவர்களுக்கான நீச்சல் குளத்தில் தவறுதலாக விழுந்து மரணமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் நடந்த ஆறாவது நாள் தமது மகன் மரணமடைந்ததற்கு மழலையர் பள்ளி நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டுமென்றும் அதற்கு முறையான விளக்கம் வேண்டுமெனவும் தாயார் டி நீலவேணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சம்பவத்திற்குப் பின்னர் ராஜா பெர்மைசுரி பைனுன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஆறாவது நாள் காலை 10.30 மணிக்கு சிறுவன் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
தமது மகனின் மரணத்திற்கு மழலையர் பள்ளி நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டுமென்றும் நீலவேணி போலீசில் புகார் அளித்துள்ளார்.
அது பற்றிக் குறிப்பிட்ட ஈப்போ போலீஸ் தலைவர் Yahaya Hassan (யஹாயா ஹசான்), சம்பந்தப்பட்ட தாயார் சிறுவனை மழலையர் பள்ளியில் சேர்க்கும்போது அவனுக்கு ஆட்டிஷம் நோய் இருப்பதாகப் பள்ளி நிர்வாகத்திற்கு அறிவிக்கவில்லை என்று நிர்வாகம் புகார் தெரிவித்துள்ளதாகத் தெரிவித்தார்
