28.6 C
Kuala Lumpur
Thursday, July 30, 2026

Vetri

விளையாட்டுத் துப்பாக்கியைக் காட்டி கொள்ளையடித்து வந்த 66 வயது முதியவர் கைது

🔥 Views : 25
👁 Reading Now : 42

🔊To listen to this news in Tamil, Please select the text.

ஈப்போ ஜாலான் ஓன் ஜாஃபாரில் தொலைபேசிக் கடையில் விளையாட்டுத் துப்பாக்கியைக் காட்டி திருட முயன்ற 66 வயது நபர் ஒருவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
அந்த முதியவர் இதற்கு முன்னர் மார்ச் 25ஆம் தேதி ஓர் ஆபரணக் கடையிலும் ஏப்ரல் 5ஆம் தேதி அங்காடிக் கடை ஒன்றிலும் அதே விளையாட்டுத் துப்பாக்கியைக் காட்டி திருடி இருப்பதாக நம்பப்படுகிறது.
இதே நபர் இதற்கு முன்னர் இரு போதைப்பொருள் குற்றச்சாட்டுகளில் போதைப்பொருள் உட்கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக ஈப்போ போலீஸ் தலைவர் Yahaya Hassan (யஹாயா ஹசான்) தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட நபர் சனிக்கிழமை வரை விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டிருப்பார் என தெரிவிகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles