33 C
Kuala Lumpur
Saturday, June 13, 2026

Vetri

57 மாட் ரெம்பிட்டுகள் போலீஸிடம் சரண்

🔥 Views : 7
👁 Reading Now : 52

🔊To listen to this news in Tamil, Please select the text.

நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் நோக்கத்தில் சொந்த ஊர்களுக்குத் திரும்பிக் கொண்டிருந்த 57 Mad Rempid (மாட் ரெம்பிட்) டுகள் போலீஸாரின் சோதனை நடவடிக்கைக்குப் பயந்து ஜாலான் கூலாய்- கோத்தா திங்கி சாலையின் 7ஆவது கிலோ மீட்டரில் இருக்கு ஒரு செம்பனைத் தோட்டத்தில் கடந்த சனிக்கிழமை காலை 4 மணி முதல் பதுங்கி இருந்துள்ளனர்.
நேரம் ஆக, ஆக சுற்றுச் சூழல் வெப்பம் அதிகரித்ததோடு, நோன்புப் பெருநாளைக் கொண்டாட முடியாமல் போகும் என்ற காணத்தினால் அவர்கள் ஒவ்வொருவராக போலீஸாரிடம் சரணடைந்தனர்.
17இல் இருந்து 42 வயதான அவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் இல்லாமை, காலாவதியான உரிமம், விதிமுறைக்கு மாறான எண் பட்டை, புகை போக்கிக் குழாயை மேம்படுத்தியது, தலைக் கவசம் அணையாதிருந்தல் போன்ற பல்வேறு குற்றங்களுக்காக 140 சம்மன்கள் வழங்கப்பட்டன.
போக்குவரத்து சட்டத்திற்கு இணங்க 39 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles