
மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக வெற்றி தமிழுக்கு கிடைத்த வெற்றியாகும். தமிழக சட்டமன்றத் தேர்தலில் மு. க ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றிருக்கிறது இது தமிழருக்கு கிடைத்த வெற்றி என்று மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் குறிப்பிட்டார். தனது தந்தையார் கலைஞர் மு.ல் கருணாநிதி பாசறையில் அரசியல் பயணத்தை தொடங்கிய மு. க. ஸ்டாலின் தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்பது தமிழுக்குக் கிடைத்த வெற்றி என அவர் வர்ணித்தார். தமிழகத்தை முன்னேற்ற பாதைக்கு முக ஸ்டாலின் கொண்டு செல்வார் என்று தமிழர்கள் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள். புதிய முதலமைச்சராக பதவி ஏற்கும் மு க. ஸ்டாலினுக்கு மலேசிய தமிழர்கள் சார்பிலும் மஇகா சார்பிலும் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் தமிழகம் மலேசியா இடையிலான நமது உறவு எப்போதும் தொடர வேண்டுமென டத்தோஸ்ரீ எம் சரவணன் தமது வாழ்த்துச் செய்தியில் கேட்டுக்கொண்டுள்ளார்



