
🔊To listen to this news in Tamil, Please select the text.
கிளந்தான் மாநிலம் எதிர்கொண்டிருக்கும் தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான திட்டங்களை விரைந்து மேற்கொள்ளும்படி, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளார்.
டோக் பாலி நீர் ஆலைத் திட்டத்தை விரைவுபடுத்தவும், பச்சோக்கில் உள்ள பழைய தண்ணீர்க் குழாய்களை மாற்றவும் 500 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படும் என்றும் இதன் தொடர்பில் பிரதமர் அறிவித்துள்ளார்.
கிளந்தான் மாநிலம் எதிர்கொண்டுள்ள நீர் விவகாரம் குறித்து தம்முடன் வெளிப்படையாகவும் நம்பிக்கையுடன் ஆலோசனை செய்த மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அகமட் யாக்கோப்பிற்கு நன்றி தெரிவிப்பதாகவும் இதன் தொடர்பில் உடனடியாக 1.7 பில்லியன் வெள்ளியை ஒதுக்க ஒப்புதல் தெரிவித்துள்ளதாகவும் தும்பாட் அட்-தக்வா பள்ளிவாசலில் செய்தியாளர்களிடம் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
