26.4 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

சித்தி காசிம் காரில் வெடிகுண்டு வைக்கப்பட்ட சம்பவம் ; இதுவரை சந்தேக நபர் யாரும் அடையாளம் காணப்படவில்லை

🔥 Views : 11
👁 Reading Now : 44

🔊To listen to this news in Tamil, Please select the text.

சமூக ஆர்வலர் சித்தி காசிம் காரில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில், புதிய தடயம் எதையும் போலீஸ் பெறவில்லை.

CCTV இரகசிய கண்காணிப்பு பதிவை ஆராய்ந்த போது கூட, சந்தேகிக்கும் வகையில் யாரும் அடையாளம் காணப்படவில்லை என்பதை, கோலாலம்பூர் முன்னாள் போலீஸ் தலைவர் டத்தோ ஸ்ரீ முஹமட் சுஹைலி முஹமட் ஜாயின் உறுதிப்படுத்தினார்.

சித்தி காசிமின் காரை சந்தேகிக்கும் வகையில் யாரும் நெருங்கவில்லை. அதோடு, காரில் சந்தேகிக்கும் வகையிலான கைரேகைகள் எதுவும் கண்டுப்பிடிக்கப்படவில்லை.

அதனால், அச்சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் போலீசாரை தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக, புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குனராக இன்று பொறுப்பேற்ற முஹமட் சுஹைலி சொன்னார்.

ஜூலை 21-ஆம் தேதி, சித்தி காசிம் காரில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், இதுவரை 13 பேரின் வாக்குமூலங்களை போலீஸ் பதிவுச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles