26.4 C
Kuala Lumpur
Saturday, April 25, 2026

Vetri

நெகிரி செம்பிலான் மந்திரிபெசராக அமினுடின் ஹருன் பதவியேற்றார்

🔊To listen to this news in Tamil, Please select the text.

நெகிரி செம்பிலான் மந்திரிபெசாராக Sikamat சட்டமன்ற உறுப்பினர் அமினுடின் ஹருன் ( Aminuddin Harun ) இரண்டாவது தவணையாக பதவி உறுதி மொழி எடுத்துக்கொண்டார். இன்று மாலை மணி 4,15 அளவில் கோலாப்பிலாவிலுள்ள இஸ்தானா பெசார் ஸ்ரீ மெனாந்தியில் நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் Tuanku Munawir முன்னிலையில் 56 வயதுடைய Aminuddin Harun பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டார். இந்த நிகழ்வில் தேசிய முன்னணியின் துணைத்தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான், DAP யின் தலைமைச் செயலாளர் Anthony Loke மற்றும் பக்காத்தான் ஹராப்பான்- தேசிய முன்னணி ஒற்றுமை அரசாங்கத்தின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

சனிக்கிழமையன்று நடைபெற்ற மாநில தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் – தேசிய முன்னணி கூட்டணி 31 இடங்களை வென்றதை தொடர்ந்து மாநில அரசாங்கத்தை நிலைநாட்டிக்கொண்டது. நெகிரி செம்பிலானில் பக்காத்தான் ஹராப்பான் 17 இடங்களையும், தேசிய முன்னணி 14 இடங்களையும் வென்ற வேளையில் பெரிக்காத்தான நேசனல் கூட்டணி 5 இடங்களில் மட்டுமே வென்றது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles