
🔊To listen to this news in Tamil, Please select the text.
தஞ்சோங் மாலிமைச் சேர்ந்த விரிவுரையாளர் ஒருவர் தொலைபேசி SCAM மோசடி கும்பலிடம் ஐந்து லட்சம் ரிங்கிட்டுக்கும் மேல் இழந்திருப்பதை Muallim OCPD Supt Mohd Nasir தெரிவித்தார். Ogos 3 ஆம் தேதியன்று நண்பகல் வாக்கில் மோசடி கும்பலைச் சேர்ந்த ஒருவர் அந்த பெண் விரிவுரையாளரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது பெயருக்கு இரண்டு பொட்டலங்கள் வந்திருப்பதாகவும் அதில் ஐந்து மை கார்டுகள், ஐந்து கடப்பிதழ்கள் மற்றும் ஐந்து எ.டி.எம் கார்டுகள் இருப்பதாகவும் கூறியுள்ளார். அதன் பின் பேரா போலீஸ் தலைமையகம் மற்றும் புக்கிட் அமான் போலீஸ் அதிகாரிகள் என கூறிக்கொண்டவர்களிடம் அந்த அழைப்பு மாற்றப்பட்டது.
அதன்பின் போலீஸ் அதிகாரி என கூறிக்கொண்ட மற்றொரு நபர் சட்டவிரோத பண பறிமாற்றம் மற்றும் ஆட்கடத்தலில் சம்பந்தப்பட்டதாக கூறி கைது வாராண்ட் பிடிக்கப்பட்டிருப்பதாக அந்த விரிவுரையாளரிடம் கூறியுள்ளார். சட்டவிரோத பண நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளரா என்பதை அறிந்துகொள்வதற்கு உடனடியாக வங்கியிலுள்ள பணத்தை பரிமாற்றம் செய்யும்படி தெரிவித்துள்ளார். அவரது பேச்சை நம்பி ஆகஸ்டு 3ஆம் தேதிக்கும் 12 தேதிக்குடையே 16 வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு 25 முறை ஐந்து லட்சத்து 37,659 ரிங்கிட்டை பறிமாற்றம் செய்துள்ளார். தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து சனிக்கிழமையன்று அப்பெண் போலீசில் புகார் செய்துள்ளார் என முகமட் நாசீர் கூறினார்.
