27.6 C
Kuala Lumpur
Monday, June 15, 2026

Vetri

பிரதமர் மோடி ஒன்றும் கடவுள் இல்லை: காங்கிரஸ் கடும் தாக்கு

🔥 Views : 10
👁 Reading Now : 63

🔊To listen to this news in Tamil, Please select the text.

பிரதமர் மோடி ஒன்றும் கடவுளல்ல; அவர் அவைக்கு வந்தால் என்ன குறைந்துவிடும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.

மணிப்பூர் விவகாரத்தை விவாதிக்கக் கோரி மாநிலங்களவையில் கடும் அமளி ஏற்பட்டது. இதனால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

“மாநிலங்களவையில் மணிப்பூர் வன்முறை குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும்; விவாதத்துக்கு பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. ஆனால், குறுகிய கால விவாதம் நடத்த தயாராக இருப்பதாக ஒன்றிய அரசு கூறி வருகிறது.

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், “பிரதமர் மோடி முன்னிலையில் எதிர்க்கட்சிகள் தங்கள் கருத்துகளை முன்வைக்கும் வகையில், விதி எண் 167இன்கீழ் விவாதத்தை அனுமதிக்க வேண்டும்.

பிரதமர் மோடி ஒன்றும் கடவுளல்ல; அவர் அவைக்கு வந்தால், என்ன குறைந்துவிடும் என்று கார்கே கேள்வியெழுப்பினார்.

அவரது இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆளும் தரப்பு எம்.பி.க்கள் கோஷமிட்டனர். இதனால் ஏற்பட்ட அமளியைத் தொடர்ந்ததால் அவை ஒத்திவைக்கப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles