26.4 C
Kuala Lumpur
Saturday, April 25, 2026

Vetri

16 லட்சம் அரசு ஊழியர்களுக்கு அக்டோபர் மாதம் சம்பள உயர்வு

🔊To listen to this news in Tamil, Please select the text.

எதிர்வரும் அக்டோபர் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருக்கும் 2024 ஆம் ஆண்டுக்கான மடானி வரவு செலவு திட்டத்தில் 16 லட்சம் அரசு ஊழியர்களுக்கு சிறிய அளவில் தற்காலிக சம்பள உயர்வை அரசாங்கம் வழங்கும். அடுத்த ஆண்டுக்குள் ஒட்டுமொத்த அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வை வழங்கும் திட்டத்தை அரசாங்கம் கொண்டுள்ளது. அதற்கு முன்னதாக தற்காலிகமாக சம்பள உயர்வை சிறிய அளவில் வழங்குவதற்கு அரசாங்கம் முன்வந்துள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தெரிவித்தார். உண்மையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

அரசு ஊழியர்களுக்கான தற்காலிக சம்பள உயர்வு குறித்து நிதி அமைச்சு, அரசாங்க தலைமைச் செயலாளர் , மற்றும் பொதுச் சேவைத்துறையின் இயக்குனர் ஆகியோருடன் தாம் பேச்சு நடத்தியிருப்பதாகவும் பிரதமர் கூறினார். லங்காவியில் Geopark Discovery மையத்தை தொடக்கிவைக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் அன்வார் இத்தகவலை வெளியிட்டார். நாட்டின் பொருளாதார ஆற்றலை பொறுத்து அரசு ஊழியர்களுக்கு கட்டம் கட்டமாக சம்பளம் உயர்த்த்தப்படும் என கடந்த ஜூலை மாதம் அன்வார் அறிவித்திருந்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles