27.6 C
Kuala Lumpur
Monday, June 15, 2026

Vetri

கைது செய்தவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்

🔥 Views : 7
👁 Reading Now : 57

🔊To listen to this news in Tamil, Please select the text.

கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை அவ்வப்போது கைது செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது. அந்த வகையில், நேற்று கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 8 17 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. மீனவர்களின் விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு இலங்கை கடற்படையினர் அழைத்துச் சென்றனர். இந்நிலையில், இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் உள்ள விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வரும் 17ம் தேதி வரை இந்த வேலை நிறுத்தம் தொடரும் என தெரிவித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles