
🔊To listen to this news in Tamil, Please select the text.
புத்ரி வங்சா சட்டமன்ற தொகுதியைக் காலி செய்ய மாட்டேன் என்று நடப்பு சட்டமன்ற உறுப்பினரான அமீரா அய்ஷா கூறினார்.
மூடா கட்சி நம்பிக்கை கூட்டணியிலிருந்து வெளியேறி ஜொகூர் மாநிலத்தில் எதிர்கட்சியாக செயல்படுகிறது.
அமானாவில் இணையும் படி ஜொகூர் மாநில நம்பிக்கை கூட்டணியின் துணைத்தலைவர் விடுத்த கோரிக்கையை அவர் நிராகரித்தார்.
புத்ரி வங்சா சட்டமன்றம் தொகுதியை நான் வெற்றிக்கொண்டுள்ளேன். மக்களால் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்டேன். இந்த தொகுதி மக்களுக்கானது என்று அமீரா திட்டவட்டமாக கூறினார்.
