
🔊To listen to this news in Tamil, Please select the text.
நடப்பு பற்றாக்குறைக்கு தீர்வு காண்பதற்கு உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அரிசியை வெளிநாட்டினர் வாக்குவதற்கு தடை விதிக்க வேண்டும் என விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு குழுவுக்கான மலாக்கா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் DR Akmal Saleh கேட்டுக் கொண்டிருப்பதை பயனீட்டாளர் அமைப்பு சாடியுள்ளது. பல்வேறு பொருளாதார விவகாரங்கள் தொடர்பான நெருக்கடியினால் சந்தையில் உள்நாட்டு அரசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. உள்நாட்டு அரிசியை வெளிநாட்டினர் வாங்குவதற்கு தடைவிதிக்கப்படுவதால் பிரச்சனைக்கு அது தீர்வாக அமையாது என மலேசிய பயனீட்டாளர் அமைப்பின் துணைத்தலைவர் Beninder Singh தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு வரி செலுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு வெளிநாட்டினரும் பங்காற்றி வருகின்றனர். அப்படியிருக்கும்போது அவர்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட அரிசியை வாங்குவதற்கு தடை விதிப்பது நியாயமாக இருக்காது என அவர் சுட்டிக்காட்டினார்.
