24.7 C
Kuala Lumpur
Thursday, September 24, 2026

Vetri

தகவல் தொடர்பு பல்லூடக சட்ட திருத்த மசோதா அடுத்த ஆண்டில் தாக்கல்

🔥 Views : 35
👁 Reading Now : 52

🔊To listen to this news in Tamil, Please select the text.

தொடர்பு மற்றும் பல்லூடக சட்டத்திருத்த மசோதா அடுத்த ஆண்டு தொடக்கத்திற்குள் தாக்கல் செய்யப்படும் . எந்த வகையான குற்றங்களுக்கும் , குறிப்பாக கணினி குற்றச்செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதை இந்த மசோதா உறுதி செய்யும் என தொடர்பு மற்றும் இலக்கவியல் துணையமைச்சர் தியோ நீ சிங் தெவித்தார். 1998ஆம் ஆண்டின் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டத்தை அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள் மறுபரிசீலனைச் செய்யும் என அவர் கூறினார். இந்த ஆண்டு அதை தாக்கல் செய்ய முடியாவிட்டால், அடுத்த ஆண்டு அதை நாங்கள் தாக்கல் செய்வோம்,” என்று அவர் நேற்று மல்பாட்: மிஸி பகாரா (Malbat: Misi Bakara) திரைப்படத்தைப் பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசியபோது தியோ நீ சிங் தெரிவித்தார்.

மோசடிகள் போன்ற சில சந்தர்ப்பங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு ஆதாரம் இருப்பதாக தியோ கூறினார்.

உதாரணமாக, மோசடி செய்பவர்கள் AI ஐப் பயன்படுத்தி ஒரு நபரின் குரல் மற்றும் தோற்றத்தைப் பிரதிபலிக்கும் வகையில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களை ஏமாற்றலாம் என்று அவர் கூறினார். கணினி மென்பொருள் மற்றும் சாதனங்கள் மூலம் மோசடி செய்யும் கூறுகளை மறைப்பதற்குச் சைபர் குற்றங்கள் குறித்த மலேசியாவின் தற்போதைய சட்டங்களை மறுஆய்வு செய்ய வேண்டியதன் அவசியத்தை போலீஸ் படைத் தலைவர் ரஸாருதீன் உசேன் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தது குறித்து தியோ நீ சிங் கருத்துரைத்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles