29 C
Kuala Lumpur
Saturday, September 26, 2026

Vetri

சாலையைக் கடக்க முயன்ற பூனை ; தவிர்க்க முயன்ற கார் கடையில் புகுந்து விபத்துக்குள்ளானது

🔥 Views : 35
👁 Reading Now : 63

🔊To listen to this news in Tamil, Please select the text.

 சாலையை கடக்க முயன்ற பூனையைத் தவிர்க்க முயன்ற மைவி கார் விபத்துக்குள்ளாகி கடையில் புகுந்ததால், இரு நண்பர்கள் பதற்றமான சூழலை எதிர்கொள்ள நேரிட்டது.

நேற்று மாலை மணி 6.15 வாக்கில், ஜாலான் மூவார் – செகாமாட் சாலையிலுள்ள, கம்போங் லுபோக் பத்துவில் நிகழ்ந்தது.

சம்பவத்தின் போது, 25 வயது இளைஞர் ஒருவர் செலுத்திய கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் இருந்த புல் மேட்டை மோதி, கடையில் புகுந்து விபத்துக்குள்ளானதாக, செகாமாட் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் அஹ்மட் ஜம்ரி மரின்சா தெரிவித்தார்.

எனினும், அச்சம்பவத்தில், காரில் இருந்த இரு நண்பர்களுக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.

சம்பவத்தின் போது, கடையில் வாடிக்கையாளர் யாரும் இல்லை என்பதோடு, உரிமையாளர் கடையின் பின்புறத்தில் வேலை செய்துக் கொண்டிருந்ததால், உயிருடற் சேதம் எதுவும் பதிவுச் செய்யப்படவில்லை.

அச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் போலீசாரை தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles