33.5 C
Kuala Lumpur
Saturday, June 13, 2026

Vetri

மின்னல் பண்பலை வானொலியின் பிந்தாங் மின்னல் 2023 இன்னொரு பிரம்மாண்டம்

🔥 Views : 5
👁 Reading Now : 22

🔊To listen to this news in Tamil, Please select the text.

அங்காசாபுரி, செப்.24:
பாடும் கலையில் ஆர்வமும் அக்கறையும் கொண்ட கலைஞர்களை அடையாளம் கண்டு அவர்களை மேடையேற்றுவதற்காக மின்னல் பண்பலை வானொலி சார்பில் தொடர்ந்து பிந்தாங் மின்னல் என்ற பெயரில் பாட்டுப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வரிசையில் இந்த ஆண்டும் ‘பிந்தாங் மின்னல் 2023’ போட்டி என்னும் பெயரில் இன்னொரு பிரம்மாண்டம் நேற்று படைக்கப்பட்டது

இதில், நிமலன் கங்காதரன் 10ஆயிரம் வெள்ளியுடன் முதல் பரிசு வென்று சாதனை படைத்தார்.

ராஜஸ்ரீ கோபி 2-ஆம் இடத்தை வென்று வெ.7 ஆயிரம் ரொக்கப் பரிசைத் தட்டிச் சென்றார். ஸ்வேதா நாயர் ஐயாயிரம் வெள்ளியுடன் மூன்றாம் இடத்தைப் பெற்றார்.

அங்காசாபுரி, ‘எம்-1 கோத்தா’ அரங்கத்தில் நேற்று நடைபெற்ற இறுதிச் சுற்றில், மூன்று பேர் கொண்ட நடுவர் குழுவின் தேர்வாக பரத் நாயர் என்னும் போட்டியாளர் அடையாளம் காணப்பட்டார். அவருக்கு மூவாரம் வெள்ளி வழங்கப்பட்ட வேளையில் மற்ற இருவருக்கும் ஆறுதல் பரிசு அளிக்கப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் 5-ஆம் நாள் நடைபெற்ற 2-ஆம் சுற்றில் 12 பேர் கலந்து கொண்டனர். அதில் தேர்வுபெற்ற 6 பேர்தான் நேற்றைய இறுதிச் சுற்றில் கலந்து கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles